Skip to main content

அதிமுக கோட்டையில்   தம்பியை தோற்கடித்த  அண்ணன்!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

எம்.ஜி.ஆர்.  , ஜெயலலிதா என இரண்டு முன்னாள் முதல்வர்களை உருவாக்கிய ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தொடர்ந்து  அதிமுக கோட்டையாக  இருந்து வந்தது.

 

l


       இந்த நிலையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்க தமிழ் செல்வன் திடீரென டிடிவி அணி பக்கம் சாய்ந்ததின் மூலம் தங்க தமிழ் செல்வனின் எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படதின் மூலம் ஆண்டிபட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

 
    இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் மகாராஜனும்.அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்  லோகிராஜனும்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயக்குமாரும் போட்டி போட்டனர்.   இதில் திமுக வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் அண்ணன் தம்பி.  அதாவது அண்ணன் மகாராஜனை எதிர்த்து தம்பி  லோகிராஜன் அதிமுகவில் களம் இறங்கியதின் மூலம் போட்டியும் கடுமையாக இருந்தது. 

 

 ஆளும் கட்சி அதிகாரம்  பண பல மூலம் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் ஒபிஎஸ் ஆதரவோடு  பணத்தை வாரி இறைத்தனர் அப்படி இருந்தும் கூட திமுகவின் ஓட்டு வங்கி தொடர்ந்து இந்த தொகுதியில் 70 ஆயிரம் ஓட்டுகள் இருந்து வருகிறது.   இந்த நிலையில் டிடிவி அணியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம்  இலை ஓட்டுகளை பிரிப்பதால்  அது திமுகவுக்கு சாதகமாக அமையும். 

 

l

 

கடந்த தேர்தலில் தங்க தமிழ்செல்வன் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அந்த ஓட்டுகளை டிடிவி அணி பிரித்தாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம் என திமுக கணக்கு போட்டு தேர்தல் களத்தில் இறங்கி உ.பி.களும் பணியாற்றி வந்தனர்.  


அதன் அடிப்படையில் தான் கடந்த 18 ம்தேதி தேர்தல் நடந்து. அடுத்து ஒருமாதம் கழித்து கடந்த 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் 489 ஓட்டுகள் முன்னைலையில் இருந்த மகாராஜன் அடுத்து வந்த இரண்டாவது சுற்றில் அண்ணனை பின்னுக்கு தள்ளி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் லோகிராஜன் முன்னனியில் இருந்தார்.  அதன் பின் தம்பியை பின்னுக்கு தள்ளி மீண்டும் அண்ணன் மகாராஜன் தொடர்ந்து முன்னுக்கு வந்ததின் மூலம் இறுதி சுற்றில் தபால் ஓட்டுகளுடன் திமுக வேட்பாளரான மகாராஜன் 85241 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளரான லோகிராஜன்  73951 ஓட்டுகளும் அ.ம.மு.க. வேட்பாளரான ஜெயக்குமார் 27788 ஓட்டுகளும் வாங்கினார்கள்.   அதன் மூலம் 11285 ஓட்டுகளை திமுக வேட்பாளரான மகாராஜன் கூடுதலாக  வாங்கி உடன் பிறந்த தம்பியை தோற்கடித்தார். 

 

அதை விட கொடுமை என்னவென்றால் இந்த ஆண்டிப்பட்டி தொகுதி தொடர்ந்து 22 வருடங்களாக அதிமுக கோட்டையாக இருந்து வந்தது.  இரண்டு முன்னாள் முதல்வர்களை உருவாக்கிய தொகுதி அப்படி பட்ட அதிமுக கோட்டையை  உடைத்து உதயசூரியன்   ஆண்டிபட்டியில்  உதிர்த்து இருப்பதை கண்டு உ.பி.களும் சந்தோஷ வெள்ளத்தில்  துள்ளி குதித்து அங்கங்கே வெடி வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வருகிறார்கள். அதோடு ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜனும் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லவும் தயாராகி வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்