Skip to main content

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

admk District Secretaries Meeting!

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று (24/11/2021) காலை 11.00 மணிமுதல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.    

 

இக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

 

இந்தக் கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்