Skip to main content

சூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சியின் 7 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மூக்குத்தி முருகன், சாம் நிஷாந்த், புன்யா, விக்ரம், கௌதம் ஆகியோர் இறுதி சுற்றுக்கு சென்றனர். இறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்களைப் பாடினார்.  இறுதியில் மூக்குத்தி முருகன் டைட்டிலை வென்று முதல் பரிசான ரூ.50 லட்சத்துக்கான வீட்டை பரிசாகப் பெற்றார். அவருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டாவது இடம் விக்ரமுக்கு கிடைத்தது. அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. 3-வது இடத்தை சாம் நிஷாந்த், புன்யா ஆகிய இருவரும் பெற்றனர். 
 

actress


 


இந்த நிலையில்  'சூப்பர் சிங்கர்' சீசன் 7 முடிவுகள் குறித்து ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில், "விஜய் டிவி - சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடுவதில் திறமையானவருக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன். அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக அற்புதத் திறமைகள். சத்யபிரகாஷ் வெற்றி பெறாத போதிலிருந்து போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீப்ரியா. 

 

 

சார்ந்த செய்திகள்