Skip to main content

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு 

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
actor vijay

 

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. தகவலை கூறிவிட்டு, அந்த அழைப்பை ஒருவர் துண்டித்துவிட்டார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள நடிவர் விஜய் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். விஜய் வீட்டில் முற்றிலும் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது. 

 

இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இதேபோல் மிரட்டல் வந்ததையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தி எதுவும் சிக்காததால் புரளி என தெரிந்ததையடுத்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மிரட்டல் விடுத்த அந்த நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்தை போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்