Skip to main content

“தலைமை அறிவிப்பை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை”  - அமைச்சர் பொய்யாமொழி 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

"Action against those who violated the leadership announcement" - Minister Poyyamozhi

 

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மறைந்த முன்னாள் திமுக செயலாளரும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கத்தின் 29வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

அதன் காரணமாக, திருச்சி வி.என் நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு அன்பில் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோர் மற்றும் கல்வி உதவிக்கான 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையுமின்றி மன மகிழ்வுடன், பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.

 

கரோனா காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்