Skip to main content

முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் காந்தி சிலைக்கு மரியாதை...

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

 

72வது மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆளுநர். பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின் முதல்வர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘உடனடியாக வெளியேறுங்கள்’; போலீசாருக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு?

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
West Bengal Governor's order to police?

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நேற்று (16-06-24) ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸை சந்திக்க வந்துள்ளனர். அவர்கள் ஆளுநரை சந்திக்க முறையான அனுமதி இருந்தும் அவர்களை ஆளுநர் மாளிகைக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஆளுநர், ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வந்தது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இத்தகைய சூழலில் தான் முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து 46 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) 3 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு 3 வது முறையாக இன்று (13.06.2024) பதவியேற்றார். அதன்படி பெமா காண்டுவுக்கு அம்மாநில ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெமா காண்டுவுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் அருணாச்சல பிரதேசத்தின் துணை முதல்வராக சௌனா மெய்ன் பதவியேற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.