Skip to main content

65 வயது ஆசிரியரை மணந்த 20 வயது மாணவி!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
A 65-year-old teacher who marries a student


 

டியூசனுக்கு வந்த 20 வயது மாணவி தன்மீது பிரியம் கொண்டதால் அவரை திருமணம் செய்து கொண்டார் 65 வயது ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். 
 

பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெய்கிருஷ்ணன் மனைவி இறந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் டியூசன் எடுத்து வந்த ஜெய்கிருஷ்ணன் பணியிலிந்து ஓய்வு பெற்ற பின்னரும் டியூசன் எடுத்து வந்துள்ளார். 
 

இவர் கடைசியாக பணியாற்றிய பள்ளியில் மகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி படித்து வந்துள்ளார். அந்த மாணவி இவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே அவ்வப்போது இந்த மாணவியின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வந்ததுடன், பிரியமாக இருப்பதாக கூறி மாணவிக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
 

பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்த பின்னரும் மகா, ஜெய்கிருஷ்ணனிடம் டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். டியூசனுக்கு சென்ற மகள் திரும்பவில்லை என்று மகாவின் தந்தை பல இடங்களில் விசாரித்துள்ளார். அப்போதுதான் தலைமை ஆசிரியரும் மாயமானது குறித்து தெரிய வந்தது.
 

இதுகுறித்து மகாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரில் தனது மகளை, ஜெய்கிருஷ்ணன்தான் கடத்தி சென்றுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார். மகா தந்தையின் புகாரை ஏற்ற போலீசார் இருவரையும் தேடி வந்ததுடன், அனைத்து காவல்நிலயைத்திற்கும் தகவல் அனுப்பினர். 
 

இந்த நிலையில் பஞ்சாப் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது இவர்கள் இருவரும், ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது. மேலும் பஞ்சாப் போலீசார் ராமேஸ்வரம் போலீசாருக்கு இருவரின் பெயர்கள், அடையாளங்களை சொல்லி அவர்களை விசாரிக்க சொல்லியுள்ளனர். ராமேஸ்வரத்தில் வெளியே சுற்றித்திரிந்த இவர்களை பார்த்த சிலர், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். 
 

இதையடுத்து ராமேசுவரம் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்து தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்துள்ளது தெரிய வந்தது. 
 

பஞ்சாப் போலீசாரும் மகா பெற்றோருடன் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அப்போது மகா பெற்றோர் முன்பு பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் மகா சொன்ன விசயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு மகா பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.
 

இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்கள் இருவரையும் பஞ்சாப் போலீசாருடன் அனப்பி வைத்தனர். 
 

மாணவி மகாவுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறி, டியூசனும் எடுத்துவந்ததால், ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. இவர்கள் இருவரும் சந்திப்பதை ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். இவர்கள் சந்திப்பை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர். இருவரும் ஜாலியாக வெளியே சென்றுவருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படிதான் ராமேஸ்வரம் வந்துள்ளனர். 
 


 

சார்ந்த செய்திகள்