Skip to main content

5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு! 

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

தமிழகத்தில் புதிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்ற புதிய மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கேவி குப்பம் என தாலுகாக்கள் வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி என நான்கு தாலுகாக்கள் வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

TAMILNADU

 

வாலாஜா ,ஆற்காடு, நெமிலி, அரக்கொணம் என நான்கு தாலுகாக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்றன. ராணிப்பேட்டை, அரக்கோணம் புதிய வருவாய் கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உருவாக்கப்படுகிறது. அதேபோல் நெல்லையை பிரித்து தென்காசி நெல்லை என இரண்டு மாவட்டம் உருவாக்கப்படுவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
 

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி என புதிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர் ,திசையன்விளை என  8 தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் வருகிறது.  தென்காசியில் சங்கரன்கோவில், தென்காசி என இரண்டு வருவாய் கோட்டங்களும் தென்காசி,  செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, உட்பட 8 தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்