Skip to main content

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய ஏர்செல்!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
aircel

தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டர் சர்வீசராக இருந்தது ஏர்செல் நிறுவனம். கிராமங்களில் முதல் முதலாக டவர் அமைத்து செல்போன் இணைப்புகள் தந்ததால் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உருவானார்கள். கோயம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தமிழக ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

 

இந்த நிறுவனம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்வீஸ் வழங்கிவந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் அலைவரிசைகளை டவரோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு அங்கு செயல்பட்ட தனது கிளைகளை மூடியது.

 

தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை வழங்கும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாக கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வந்தனர். தமிழக ஏர்செல் நிறுவனத்தையும் மூடப்போகிறார்கள் என்கிற தகவல் பரவியது. இதனால் பயந்த பல ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் மூலம் வேறு நிறுவனத்துக்கு மாற முடிவு செய்து ரெக்வெஸ்ட் தந்துவிட்டு காத்திருந்தனர். நிறுவனத்தை மூடவில்லை, அதுவெறும் வதந்தி என ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பதிலாக குறுந்தகவல் அனுப்பியது.

 

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்து மாறலாம் என காத்திருந்தனர். இந்நிலையில் இன்று 20.2.18ந்தேதி திருவண்ணாமலை, போளுர், ஆரணி, வந்தவாசி, செஞ்சி, திருக்கோவிலூர் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏர்செல் டவர் முற்றிலும் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.

 

தங்களது கைபேசி எண் பலரிடம் உள்ளதால் அதை வேண்டாம் என தூக்கி போட வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. சர்விஸ் வழங்கும் தொலைபேசி நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளலாம் என நிறுவனத்துக்கு குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் கோட் வழங்குவார்கள். அந்த கோட் எண்ணை கொண்டும்போய் வாடிக்கையாளர் மாற விரும்பும் நிறுவனத்தில் தந்தால் தான் அந்த நிறுவனத்தில் அதே எண் கிடைக்கும். அப்படி குறுந்தகவல் அனுப்ப ஏர்செல் சிக்னல் கிடைக்க வேண்டும், இப்போது அதுவும் கிடைக்காததால் திருவண்ணாமலை மாவட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் நொந்துப்போய் உள்ளார்கள்.

 

இதுப்பற்றி விளக்கம் பெற திருவண்ணாமலை ஏர்செல் அலுவலகத்துக்கு வாடிக்கையாளர்கள் சென்றால் அது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர் ஏஜென்சி எடுத்தவர்கள். வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டால் அங்கு யாரும் போனை எடுப்பதில்லை என்பதால் நொந்துப்போய்வுள்ளனர் வாடிக்கையாளர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.

Next Story

தன்பாலின ஈர்ப்பாளர்களே குறி; அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Gangs targeting youngsters

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதேபோன்ற சம்பவம் ஆலங்குளத்தில் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இதேபோல தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் ஆசை காட்டி ஆப் மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அழகான ஆண்களை அறிமுகப்படுத்துவதாக பிரபல செல்போன் ஆப் மூலம் பழகி பின் நேரில் வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.