Skip to main content

பட்டப்பகலில் 29 லட்சம் வழிப்பறி... சேத்துப்பட்டில் பரபரப்பு

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

 29 lakh highway robbers in broad daylight... There is excitement in Sethupat

 

சென்னையில் ஆட்டோ மொபைல் நிறுவன ஊழியர்களிடம் 29 லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே ஆட்டோ மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களான சந்தோஷ், கமலக்கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில மர்ம நபர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்து 29 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இருவரிடமும் பணத்தை வழிப்பறி செய்த அந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்டோ மொபைல் நிறுவன ஊழியர்களிடம் 29 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் சென்னை சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்