Skip to main content

தமிழகத்தில் மேலும் 26 எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்!  

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

26 more police SPs relocated in Tamil Nadu

 

தமிழகத்தில் மேலும் 26  எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் புதிதாக திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.  முன்னதாக பல ஐ.ஏ.எஸ், ஐ.பிஎ.ஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது தமிழகத்தில் மேலும் 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

நேற்று 46 எஸ்.பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் இன்று மேலும் 26 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக கிங்ஸ்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலப்பிரிவு உதவி ஐ.ஜியாக சம்பத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி.யாக இருந்த சண்முகப்பிரியா சைபர் கிரைம் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்படி பல்வேறு  துறைகளைச் சேர்ந்த 26 எஸ்.பிக்களை தமிழக அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்