Skip to main content

அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018



 

Government Employees - Teachers

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில் தொடர் மறியல் போராட்டம் இன்று முதல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். கோட்டை நோக்கி புறப்பட தயாராக இருந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். தொடர் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

அதனால் சிறிது நேரம் வரை போராட்டக்குழுவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 100 பெண்கள் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு பஸ், வேனில் போலீசார் அழைத்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

இருவேறு சம்பவங்களில் சஸ்பெண்டான இரண்டு அரசு ஆசிரியர்கள்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Two government teachers suspended in two separate incidents

 

விழுப்புரம் மாவட்டத்தில் பார்ட்னர்ஷிப் முறையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாகக் கூறி 26 பேரிடம் இரண்டரை கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட நாவர்குளம் பள்ளி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராமசாமி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.  

 

அதை அடுத்து கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் இடிப்பது சம்பந்தமாக அதில் செயல்பட்டு வந்த ஆய்வுக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தபோது அங்கிருந்த ஆசிட் பாட்டில் தவறி விழுந்து 4 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமன் அலட்சியமாகச் செயல்பட்டதால் தான் மாணவிகளுக்கு ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த காரணத்திற்காக தலைமையாசிரியர் ராஜாராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா. 

 

 


 

Next Story

கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்தபின்புதான் ஏற்போம்: அரசின் நிலைப்பாட்டை வரவேற்ற ஆசிரியர்கள்!!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

We will only accept amendments to education policy; Teachers to welcome the government's position !!

 

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தைக் கரோனா நிவாரண நிதிக்காக எடுத்துக்கொள்ளும் அரசாணையை வெளியிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், தற்போது வேகமாக பரவிவரும் கரோனாவின் தாக்கம் பலரது குடும்பங்களை சின்னாபின்னமாக்கிவருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை செய்வதற்கு போதுமான நிதி ஆதாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திரட்டிவரும் நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுடைய மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

 

எனவே, அதற்கான அரசாணையை தாங்கள் விரைவில் வெளியிட்டு நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதை வரவேற்கிறோம். அதேபோல் தமிழக அரசு முன்வைத்துள்ள திருத்தங்களை செய்தபின்புதான் மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஆசிரியர்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.