Skip to main content

'2 டன்' அரிசி சிப்பங்கள் பறிமுதல்! - தப்பிய அரிசி மாஃபியாக்கள்!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

2 ton rice packs confiscated rice mafias escaped

 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம், மசிகம் கூட்ரோடு அருகே ஒரு இடத்தில் பல மூட்டைகள் இருப்பதாக பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 2 ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கு அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

 

நேரில் சென்று சோதனையிட்டபோது, அது நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசி மூட்டைகள் என்பது தெரியவந்தது. கணக்கெடுத்ததில் 35 சிப்பங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த எடை 1,953 கிலோ என்பதும் தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மார்ச் 3 ஆம் தேதி குடியாத்தத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர். அந்த அரிசி சிப்பங்களை அங்கு கொண்டு வந்தது யார்? எங்கு அனுப்ப அங்கு வைத்திருந்தார்கள்? என விசாரணை நடத்திவருகின்றனர் அதிகாரிகள்.

 


 

சார்ந்த செய்திகள்