Skip to main content

சென்னை நட்சத்திர ஓட்டலில் பிடிபட்ட 11 கோடி;தங்க கடத்தலை துப்புதுலக்கும் வருவாய் புலனாய்வுதுறை!!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் சர்வதேச தங்க கடத்தல் கும்பலை பிடித்துள்ள வருவாய் புலனாய்வுத் துறையினர் 7 கிலோ தங்கம் 11 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

raid

]

சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு கடத்தல் தங்கம் வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு துறையினர் மேற்கொண்ட அதிரடி ரெய்டில் 7 கிலோ தங்கம் மற்றும் 11 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை கையோடு பிடித்தனர்.

 

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெளிநாட்டவர்களிடமிருந்து கடத்தல் தங்கத்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் ரகசிய தகவல் வருவாய் புலனாய்வுத்துறை கிடைத்தது. இந்த தகவலை வைத்து அந்த நட்சத்திர ஹோட்டலை வருவாய் புலனாய்வுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 

 

raid

 

இந்நிலையில் ஹோட்டலில் இருந்து கனத்த சுமையுடன் வெளிவந்த தொழிலதிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அந்த சோதனையில் ஒரு கிலோ தங்ககட்டியாக 6 கிலோ தங்கம் சிக்கியது. அதேபோல் ஹோட்டலில் தங்கியுள்ள இரண்டு வெளிநாட்டவர்கள் விமானத்தின் மூலம் தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்து தங்கத்தை கைமாற்றியதாக தொழிலதிபர் தெரிவித்தார்.

 

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த தென்கொரியாவை சேர்ந்த நூன் சோனிமி,வியோன் மிஹாவ்  ஆகிய இரண்டு பெண்களை பிடித்து  விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ஹாங்காங்கில் இருந்து தங்கம் கடத்தி வந்ததை அந்த இரண்டு பெண்களும் ஒப்புக் கொண்டனர்.  மேலும் விசாரணையில் கிடைத்த தகவல் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

 

raid

 

அதேபோல் அந்த தொழிலதிபரின் ஜவுளிக்கடையில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் 5.1 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த தொழிலதிபருக்கு உதவிய  இரண்டு கூட்டாளிகளும் சிக்கியுள்ளனர். அதேபோல் இந்த விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

தொழிலதிபர், கூட்டாளிகள் இருவர்,  இரண்டு பெண்கள் என மொத்தம் 5 பேரை கைது செய்து இதுதொடர்பாக தீவிர விசாரணையில் வருவாய் புலனாய்வுத் துறை வைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்