Skip to main content

108-ல் நடந்த பிரசவம்-பணியாளர்களை பாராட்டும் உறவினர்கள்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
108 birth-relatives praise the staff!

புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம்  கிராமத்திலிருந்து 108 -க்கு அழைப்பு சென்றது. பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகனும் என்று கூறியுள்ளனர்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நின்ற 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று  பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த சத்யா  (வயது 30 ) என்ற கர்ப்பிணியை ஏற்றி கொண்டு அறந்தாங்கி விரைந்தனர். செல்லும் வழியில் சத்யாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் பிரகாஷ் ஆம்புலன்சை ரத்தின கோட்டை அருகில் சாலை ஓரமாக நிறுத்தினார்.

வலி அதிகரித்து துடித்த சத்யாவுக்கு 108  ஆம்புலன்ஸ்  அவசரகால மருத்துவ நிபுணர் கருணாகரன் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து முதலுதவி சிகிச்சை அளித்தார். சத்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக அறந்தாங்கி  அரசு  மருத்துவமனைக்கு  அழைத்து சென்று அங்கு தாய், சேய் இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் மருத்துவ நுட்புனர் கருணாகரன்  ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உறவினர்கள் மற்றும் அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்