Skip to main content

ஜெ.,படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
stalin 1.jpg


ஜெ.,படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன்? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசரமாக பேரவையில் படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டசபை மரபை காக்க வேண்டிய சபாநாயகர், அதனை மீறி இருக்கிறார். ஜெயலலிதா படத்திறப்பு விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை.

ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர கதியில் ஜெயலலிதாவின் படம் பேரவையில் திறக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்