Skip to main content

“ஜெ மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இல்லை” - செல்லூர் ராஜு

Published on 05/12/2022 | Edited on 06/12/2022

 

“We have no doubts about J's tragedy; The commission is to allay people's fears” - Sellur Raju

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தொடர்ந்து பழனிசாமி தரப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் நாங்கள் தான் தேர்தல் ஆணையம் அமைத்தோம். அதை இந்த அரசு அரசியல் ஆக்குகிறது. இந்த இயக்கத்தைச் சிறுமைப் படுத்திவிடலாம் என நினைத்தால் அது முடியாது" என்றார்.

 

ஜெ. மரணத்தில் இருந்த சந்தேகங்கள் நீங்கி விட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “சந்தேகங்கள் எங்களுக்கு ஏற்படவே இல்லை. இருந்தாலும் மக்களின் எண்ணங்களையும் அச்சங்களையும் போக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆணையம் அமைத்தார். 

 

2024 தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகளை முடிவு செய்யலாம். அதிமுக பழனிசாமி தலைமையில் மிகச்சிறப்பாக நடந்துகொண்டு உள்ளது” என்றார்.எடப்பாடி பழனிசாமி தலைமையை டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் ஏற்றுக்கொண்டால் அவர்களை வரவேற்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது காலத்தின் கட்டாயம்” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்