கரோனா பரவல் திருண்ணாமலை மாவட்டத்தில் அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டம் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களுள் ஒன்றாக இருக்கிறது. திருவண்ணாமலை நகரத்திலும் 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.க. சார்பில் அதன் நிர்வாகிகள் உதவிகள் செய்து வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை நகரில் உள்ள சுலைமான்ஷா பள்ளிவாசலில் உதவி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.
மே 31ஆம் தேதி தி.மு.க.வை சேர்ந்த செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான ஸ்ரீதரன், நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு, உணவு கொண்டு செல்ல டிபன் பாக்ஸ் அடுக்கு, லுங்கி, முகக் கவசம், படுத்து உறங்க பாய், கிருமி நாசினி, பழங்கள் என 12 வகையான பொருட்களை வழங்கினார்.
கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, வழக்கமாகத் தொழில்கள் தொடங்கி, வேலைகள் கிடைக்கும்போதுதான் ஏழைக் கூலி மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். பல ஏழை மக்கள் உடை வாங்கவதற்குக் கூட முடியாமல் தவிக்கின்றனர். அதனைக் கவனத்தில் கொண்டே லுங்கி, பாய் போன்றவற்றை வழங்கினோம் என்கிறார் ஸ்ரீதர்.