Skip to main content

''தமிழகத்தில் எதைச் செய்தாலும் அரசியலாக்குகிறார்கள்''- எல்.முருகன் பேட்டி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

l murugan

 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால் தமிழகச் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதைச் செய்தாலும் அரசியலாக்குவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. வேளாண் திருத்தச் சட்டங்களை எந்த விவசாயியும் எதிர்க்கவில்லை. இரண்டு மாநிலங்களைத் தவிர எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. குறிப்பாகத் தமிழகத்தில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். தேவையே இல்லாமல் சட்டமன்றத்தின் நேரத்தை வேஸ்ட் செய்து எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்