Skip to main content

“நீங்க சொல்ற மாதிரி இங்க யாரும் இல்ல... போய்ட்டு வாங்க” - தேர்தல் ஆணைய அறிக்கையை திருப்பி அனுப்பிய ஈபிஎஸ் தரப்பு

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

"There is no one like you say" is the EPS side that sent back the Election Commission report

 

பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் மார்க் 3 எனப்படும் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்துகளைக் கேட்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

 

தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16ல் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் அனுப்பியுள்ளார்.

 

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடிதத்தை அதிமுக தலைமைக் கழகம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில்லை எனக் கூறி  தலைமைக் கழக நிர்வாகிகள் இக்கடிதத்தை வாங்காமல் திருப்பு அனுப்பியுள்ளனர்.

 

முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அதிமுகவிற்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் எனக் குறிப்பிட்டு அனுப்பியதும் குறிப்பிடத்தகுந்தது.

 


 

சார்ந்த செய்திகள்