Skip to main content

“கூட்டணியே வேண்டாம்; உங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது” - அண்ணாமலை குறித்து புகழேந்தி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

“There is no alliance; We cannot do politics with you” - Pugahendi about Annamalai

 

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

ஆட்சி அதிகாரத்துக்கு, எம்.பி. பதவிக்கு வரவேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு கிடையாது. அரசியல் பயணத்தில் எதையும் அடையாதவன் நான். கர்நாடகத்தில் தமிழ் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் சினிமாவும் வந்தற்கு காரணம் புகழேந்தி தான். சித்ரா லட்சுமணன் கூட கடிதம் எழுதிப் பாராட்டினார். என் வீடு சூறையாடப்பட்ட போது அன்றைய முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். அப்படியெல்லாம் போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள். 

 

கர்நாடகத்தில் உங்களை யாரென்று தெரியும். அங்கு உங்களால் தான் பெரிய தோல்வி. பழனிசாமியும் அண்ணாமலையும் நெடுநாட்களாக நாடகம் செய்து கொண்டுள்ளார்கள். பழனிசாமி எதிரி என்பதால் நான் சொல்லவில்லை. இப்போது கூட எதோ தீர்மானம் போட்டுள்ளார்களாம். என்ன வெங்காயம் தீர்மானம் போடுவது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லுங்கள்.

 

கூட்டணியே வேண்டாம். தமிழ்நாடில் ஒரு எம்.எல்.ஏ. கூட உங்களால் ஜெயிக்க முடியாது. உங்களை வைத்துக்கொண்டெல்லாம் அரசியல் எல்லாம் செய்ய முடியாது. போற இடங்களில் மக்கள் எங்களைப் பார்த்து, இவரை எல்லாம் கூட்டணியில் வைத்துள்ளீர்களே. உங்களுக்கு வெக்கம், மானம் இல்லையா எனக் கேட்பார்கள். என் வீட்டில் கூட ரெய்டு விட்டாச்சு. என்னிடம் ஒன்னும் இல்லை” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்