Skip to main content

தங்கதமிழ்ச்செல்வனை கைது செய்ய வேண்டும்: த.மு. கழக தலைவர் வலியுறுத்தல்

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
Thanga Tamil Selvan




நீதிபதியை விமர்சனம் செய்த தங்கதமிழ்ச்செல்வனை கைது செய்ய வேண்டும் என தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். இதை தினகரன் ஆதரவு எம்எல்ஏ  தங்கதமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.


அப்போது மறைந்த நடிகர் எம்ஆர்.ராதா ஏதோ ஒரு படத்தில் வக்கீல்களையும், நீதிபதியையும் குறித்து கேட்ட போது, 25 வருடமாக பொய்யே பேசி, வாதாடிய வக்கீல் நீதிபதியானால்  பொய்யை தவிர வேறு எதை சொல்வார் என மிக அறிவாளி போல இந்த கருத்தை சொல்லி, இப்போது நீதிபதி சத்தியநாராயணன் வழங்கிய இந்த தீர்ப்பும் அப்படித்தான் நான் நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


நீதிபதிகளின் மாண்பையும், நீதியையும் ஏளனம் செய்து பேசி, இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த வக்கீல்களை அவமானப்படுத்திய, தங்க தமிழ்ச்செல்வனுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

எனவே இவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்