Skip to main content

ஸ்டாலின் கணக்கு பலிக்குமா?

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

மே 18ஆம் தேதி  ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி,சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சன்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது   கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியானது. அதுபோல இங்கு நடக்கும் எடப்பாடி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 18 எம்எல்ஏக்களின் பதவியை பறித்ததால்தான் இடைத்தேர்தல் வந்தது. தற்போது நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதியில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது என உளவுத்துறை கூறியுள்ளது. தற்போது நடக்கும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் மே 23ம்தேதி வாக்குகளை எண்ணும் போது நாம்தான் வெற்றி பெற போகிறோம். 

 

stalin



தற்போது நம்முடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சேர்த்து 97 பேர் உள்ளோம். இந்த 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும் போது நமது எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து விடும். ஆட்சியை பறி கொடுத்து விடுவோம் என அதிமுக பயந்து தற்போது 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்காகத்தான் நாம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து அவர்களுக்கு செக் வைத்துள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும் கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் தேக்க தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சத்துணவு கூடம், ரேசன் கடை அமைக்க சண்முகையா வெற்றி பெற்றவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார். இந்த தொகுதி முழுவதும் சுற்றிசுற்றி வந்த போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என்று பேசினார். இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஆட்சி மாற்றத்திற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மக்களிடம்  கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்