Skip to main content

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் துணைவியார் பேராசிரியர் பூரணம் காலமானார்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் வெளியீடான ''கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை'' புத்தகத்தின் ஆசிரியருமான இடதுசாரி சிந்தனையாளர் தோழர் இரா.ஜவஹர் அவர்களுடைய துணைவியார் பூரணம் அவர்கள் கோவிட்-19 பாதிப்பால், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (24.09.2020) பகல் 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். கரோனா தொற்றால் உரிய பாதுகாப்புடன், அவருடைய உடல் பெசன்ட் நகர் மைதானத்தில் எரியூட்டப்பட்டது. 

 

சென்னை ராணி மேரி கல்லூரியில், பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்ற பூர்ணம் அவர்களுக்கு வயது 70. கம்யூனிஸ்ட் தோழர்களிடமும், நக்கீரன் குடும்பத்தினரிடமும் தாய் உணர்வுடன் அன்பு காட்டிய பூர்ணம் அவர்களின் இறப்பு அனைவருக்கும் பலத்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

அவரது நினைவைப்போற்றும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைப் பதிவு செய்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்