Skip to main content

என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்! - சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் நிறுவனரும், ஆந்திர மாநில முதல்வருமான என்.டி.ராமா ராவின் 95ஆவது பிறந்த தினமான இன்று, அந்த மாநாட்டின் மூன்றாவது நாளாக அனுசரிக்கப்பட்டது. அப்போது கட்சி ஊழியர்களுக்கு மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் நமது மூத்த தலைவர் என்.டி.ராமா ராவுக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் என்.டி.ராமா ராவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும், பள்ளிப் பாடங்களில் என்.டி.ஆர். குறித்த வாழ்க்கை வரலாறு பாடமாக இடம்பெறும் மற்றும் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்