Skip to main content

சசிகலாவின் விசுவாசியா எடப்பாடி? பாஜக சந்தேகம்!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று பாஜக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலின் பொறுப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கவனிப்பார் என்றும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி கவனிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். 
 

admk



இதற்கு பாஜகவிடம் வந்த ரகசிய உத்தரவே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி மீது இருந்த அதிருப்தி காரணமாகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக போன அமைச்சர் சி.வி.சண்முகத்தை அனுமதிக்கவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது எடப்பாடியும் இன்னும் சில அமைச்சர்களும் சசிகலாவின் பக்கம் தான் இன்னும் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் பாஜக தலைமைக்கு வந்துள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும்  எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் மகன் சசிகலா  குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பதும் பாஜகவிற்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்