Skip to main content

''அந்த குரங்கின் நிலைதான் இந்த ஆட்சிக்கும்''- எடப்பாடி விமர்சனம்!

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 "This regime is the condition of that monkey"- Edappadi review!

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்ன ஆகும் என அனைவருக்கும் தெரியும். பூமாலையை குரங்கு புழுதியில் எறியும், கொள்ளிக்கட்டையை கொண்டு தன் தலையையும் சொரியும், ஊரையும் எரிக்கும். அந்த குரங்கின் நிலைதான் இன்றய திமுக அரசின் நிலை. பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்காதது, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதை தடுக்க, திசை திருப்ப மூன்றாவது முறையாக சோதனை நடத்தி இருக்கிறது திமுக அரசு. முன்னாள் அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு மூடுவிழா செய்தல், ஊழல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் உள்ளிட்ட தீய செயல்களில் திமுக ஈடுபட்டு வருகிறது'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்