Skip to main content

ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வின் காவிக்கொடியால்தான் சூழ்ந்திருக்கிறது... -பொன். ராதாகிருஷ்ணன்

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

pon rathakrishnan




"குமரியிலும், கோவையிலும் மட்டுமே பா.ஜ.க. கொடி பறந்தது என்ற நிலையெல்லாம் மாறிவிட்டது. இனி தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகும்." என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
 

ஈரோட்டில் இன்று அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேலும் கூறும்போது, "தமிழ்நாட்டில் காவி கொடி பறக்க ஒரு அடி மண் கூட தர மாட்டேன் என திராவிட இயக்க தலைவர்கள் கூறினார்கள் ஆனால் ஒரு அடியா...? இப்போது ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வின் காவிக்கொடியால் தான் சூழ்ந்திருக்கிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில் வெற்றி மாலை கிடைத்தது. வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு, நமதுகூட்டணிக்கு வெற்றி மாலைதான். இந்தியாவிலேயே முழு வெற்றி என்ற மகுடத்தை மீண்டும் பிரதமராகும் நமது மோடிக்கு, தமிழ்நாடு கொடுக்கப்போகிறது " என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்