பொதுவாக அரசியல் தலைவர்களை சந்திக்க வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிந்து வரவேற்பு அளிப்பார்கள். இன்னும் சிலர் கட்சியின் தலைமையை ஈர்ப்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை கொடுப்பார்கள். சமீப காலமாக கட்சி தலைவர்கள் தங்களை பார்க்க வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் காலில் விழ வேண்டாம், பூங்கொத்து கொடுக்க வேண்டாம் மற்றும் சில பரிசு பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக தலைமை நிலையம் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகள், பூங்கொத்துகள், பழங்கள் ஆகியவற்றை வழங்குவதை தவிர்க்கும்படி தலைமை நிலையம் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ருத்துவர் அய்யா அவர்களுக்கு, அன்பின் மிகுதியால் ஏதேனும் பரிசுப் பொருள் அளித்தே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், மிகவும் எளிமையாக ஒரே ஒரு எலுமிச்சை பழம் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதுவும் கூட வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அதற்காக அலைய வேண்டாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.