Skip to main content

திமுகவில் இணைந்த பாமக துணைப் பொதுச்செயலாளர்

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் திமுகவில் இன்று காலை இணைந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (16-03-2021) காலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பா.ஸ்ரீதர், அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தார்.

அவருடன், புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

சார்ந்த செய்திகள்