Skip to main content

"ஓபிஎஸ் நீக்கம் செல்லும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

OPS Removal will proceed - Ex-minister Jayakumar

 

அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கின்றது. 

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தீர்ப்பின் அம்சங்களாக ஜூலை 11 அன்று கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு சட்டப்படி செல்லும். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை அதிமுக தொண்டர்கள் வரவேற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எனவும் ஒற்றைத்தலைமை அங்கீகாரத்தையும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜூலை 11 ல் நடந்த பொதுக்குழு செல்லும் எனும் போது ஓபிஎஸ் நீக்கமும் செல்லும்" என கூறியுள்ளார். 

 

இரண்டாவதாக நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது . 

 

 

 

சார்ந்த செய்திகள்