Skip to main content

சொந்தக் கட்சியினரையே டெரராக்கிய ரங்கசாமி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021
ddd

 

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11-ஆம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநிலமெங்கும் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்தி ருந்தனர். இதனால் உற்சாகமான கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி, தொண்டர்களின் வாழ்த்து கரகோஷத் திற்கிடையே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

 

அதன் பின் மைக்கப் பிடித்தார். ’’இந்த அஞ்சு வருசமா புதுச்சேரிய குட்டிச் சுவராக்கிவிட்டது நாராயணசாமி அரசு. கவர்னருடன் சண்டை போடுவதே அவருக்கு வேலையாப் போச்சு. ஐயாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன்னு சொன்னது என்னாச்சு.

அதனால தான் சொல்றேன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தாத் தான் வளர்ச்சி அடையும். இல்லேன்னே இப்படியே தான் இருக்கும். அதனால நான் சொல்றேன், மாநில அந்தஸ்து கிடைக்கு வரை எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிட மாட்டோம்னு முடிவு பண்ணனும். அப்பத்தான் இதற்கு விடிவு கிடைக்கும்’’ என பேசிக்கொண்டே வந்தவர், வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும், ஆட்சியையும் பிடிக்கும்'' என டெக்னிக்காகப் பேசி சொந்தக் கட்சியினரையே டெரர்ராக்கினார் ரங்கசாமி. 


இதனிடையே முதல்வர் நாராயணசாமியும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்தலில் போட்டி என்கிற அரசியல் பார்வைக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கும் மீண்டும் முதல்வராகும் ஆசை உள்ளது என்று கடந்த வாரம் புதுச்சேரி அரசியலில் பேசிக்கொண்டிருந்தனர்.

 

இந்தநிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி,  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடன் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க, சுயேச்சை  எம்.எல்.ஏக்களும் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்