Skip to main content

அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பு உண்மையா? டி.டி.வி. தினகரன் கேள்வி

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

minister Sellur K. Raju - T. T. V. Dhinakaran


கடந்த வாரம் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ''பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பூ வியாபாரிகள் போன்ற சிறு கடைக்காரர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகலை மட்டும் வழங்கி ரூபாய் 50,000 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு குறைந்த வட்டியில் 350 நாட்கள் வரை தவணை முறையில் செலுத்தலாம்'' எனத் தெரிவித்திருந்தார்.
 


இந்தநிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாகச் செய்திகள் வருகின்றன. 

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. கரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது. 
 


அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைககள் என்ன? - என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

 


 

சார்ந்த செய்திகள்