Skip to main content

“எங்க கை என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா...” - அமைச்சர் சேகர் பாபு 

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

minister sekar babu talk about seeman

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட நிலையில் பேனா சின்னம் அமைப்பதற்கு ஆதரவாக ஒரு தரப்பும் அதற்கு எதிராக மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தனர்.

 

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப் பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க... ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க... யார் கேட்டா பேனா சின்னம்? ஏன், பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள். நினைவிடம் கட்டி உள்ளீர்களே... அங்கே வையுங்கள். கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' எனத் தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் . 

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “எங்க கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா... எல்லாருக்கும் கை இருக்கு” எனத் தெரிவித்திருக்கிறார்.  

 

 

சார்ந்த செய்திகள்