Skip to main content

எடப்பாடி டெல்லி பயணத்தின் நோக்கம்!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.வருகிற ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும்  நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த உடன் நேற்று மாலை தமிழக முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலை குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.
 

eps



நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அரசியல் முடிவுகள் குறித்தும் பேச உள்ளதாக கூறிவருகின்றனர்.அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் குறித்தும்,இரட்டை தலைமை,ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் விவாதம் எழுந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தேர்வுத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டன” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
 Rahul Gandhi criticized BJP-ruled states have become exam paper leak center

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார்.

பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மூலம் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், இந்த பாஜக ஆளும் மாநிலங்களில், தேர்வுத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. நமது நீதித்துறையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார்.