தமிழக சட்டமன்றம் இன்று கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. இந்த கூட்டம் 16-ந்தேதி வரை நடக்கிறது. நீட் தேர்வு தற்கொலைகள், கரோனா ஊழல்கள், கிஸான் திட்ட ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளை பேரவையில் கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்ததால் திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட எ.எல்.ஏ. கு.க.செல்வம், சட்டமன்றத்துக்கு இன்று செல்கிறார். சட்டமன்றம் செல்வதற்கு முன் தமிழக பாஜக தலைவர் முருகனை சந்திக்கவிருக்கிறார் கு.க.செல்வம். முருகனும் செல்வமும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கிறார்கள். பேரவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கு.க.செல்வத்துக்கு பல யோசனைகளை முருகன் தெரிவிக்கவிருக்கிறார்.
"பாஜகவுக்கு எதிராக திமுக ஏதேனும் பிரச்சனைகளை முன் வைத்தால் அதற்கு கு.க.செல்வம் பதிலடி தருவார் " என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.