Skip to main content

பா.ஜ.க.வுக்கு உதறலை ஏற்படுத்திய காங்கிரஸ் பிரச்சாரம்!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச அரிசி, வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள மக்களுக்கு மானிய விலையில் அரிசி தரும் அன்ன பாக்யா திட்டம், இந்திரா கேண்டீன் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை, கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் காங்கிரஸ், இதுபோன்ற திட்டங்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்திவைக்கப்படும் என பிரச்சாரங்களில் பேசிவருகிறது. 

Karnataka

 

இந்நிலையில், பெங்களூரு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய எடியூரப்பா, ‘காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள், பாஜக ஆட்சியிலும் தொடரும். ஆனால், அந்தத் திட்டங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்படும். உதாரணமாக அன்ன பாக்யா என்பதற்கு பதிலாக அன்ன தஷோகா, இந்திரா கேண்டீனுக்கு பதிலாக வேறு ஒரு நல்ல தலைவரின் பெயர் வைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக, பாஜக தங்கள் வாக்குறுதிகளை அப்படியே காப்பியடித்துக் கொண்டிருப்பதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியிருந்தார். அதை உண்மையாக்கும் விதமாக எடியூரப்பா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்