Skip to main content

“தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” -கனிமொழி பரப்புரை

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

 Kanimozhi campaign at selam

 

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். 

 

அவர் பேசுகையில், ''வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படும்'' என்றார்.

 

முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பேசுகையில், ''கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கோடிக்கணக்கில் சுழல் நிதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் பொருள்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகளவு நடக்கிறது'' என்றனர்.

 

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், பார்த்திபன் எம்பி., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்