Skip to main content

’முடியல....’ - கமல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Published on 24/02/2018 | Edited on 26/02/2018

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில் கமல்ஹாசன் பேசினது:

Kamal video


’’தமிழ்நாட்டில் சில சாலைகளில்   மின்சாரம் அபாயம் என்று இருக்கும்.   அது மாதிரி தமிழ்நாட்டுக்கே ஒரு போர்டு வைக்க வேண்டும் என்றால் என்ன வாசகம் எழுதலாம்.. தெரியுமா? 

‘பார்வையாளர்கள் அபாயம்’ என்ற வாசகம் வைக்கலாம்.   ஆமாம், நம்ம நாட்டில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் ஏராளம்.  எது எப்படி போனால் என்ன என்று அப்படியே பார்த்துப்போக பழகிவிட்டோம்.   என்னையும் சேர்த்துதான்.   நானும் அப்படித்தான் இருந்தேன். முடியல...பார்த்தது போதும், பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்.’’                                                                          

சார்ந்த செய்திகள்