Skip to main content

“மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன்” - கிருஷ்ணகிரியில் நட்டா இருக்கும்போதே கட்சியிலிருந்து விலகிய பாக்கியராஜ்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

"Happily resigning" Pakiyaraj quits party despite JP Natta in Krishnagiri

 

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா உரையாடிக் கொண்டிருந்தபோதே மாவட்ட ஐ.டி விங் பொறுப்பாளர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, அங்கிருந்து காணொளி மூலம் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் திருச்சி, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களில் இன்று முதல் பாஜக தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.

 

ஜே.பி. நட்டா மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஐ.டி விங் கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். தம்பி அண்ணாமலைக்கு சகோதரர் CTR. நிர்மல் குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னை விட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார். ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம். தம்பி அண்ணாமலை அவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) டில்லி செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல் குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்