Skip to main content

“நேர்மையாக நடத்தியதால்தான் இது நடைபெற்றுள்ளது” - அமைச்சர் கே.என். நேரு பேட்டி!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

"This is happening because of honesty" - Minister KN Nehru interview

 

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிராட்டியூர், ராம்ஜி நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்காக 4 கோடியே 50 லட்சம் செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான பணியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார். விழாவிற்குப் பின்னர் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறும்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

 

தமிழக தேர்தல் ஆணையத்துடன் பேசி அவர்கள் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடக்கும். திமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் மிக நேர்மையாக நடந்துகொண்டுள்ளனர். ஒரு வாக்கு, 4 வாக்கு வித்தியாசத்தில் எல்லாம் திமுகவினர் தோல்வியை தழுவியுள்ளனர். நேர்மையாக நடத்தியதால்தான் இது நடைபெற்றுள்ளது. தோல்விக்கான காரணத்தை தேடித் தேடி அதிமுகவினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காவிரி பாலம், திருச்சி மாநகரில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

"This is happening because of honesty" - Minister KN Nehru interview

 

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதற்காக 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மார்க்கெட்டுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும். கோயில் திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதை தெரிந்துகொண்டு பிஜேபி போராட்டம் நடத்தியது” என்று அவர் கூறினார்.

 

ADS

 

 

சார்ந்த செய்திகள்