Skip to main content

அமைச்சர் சேகர் பாபுவிற்கு அதிரடி சவால் விடுத்த எச். ராஜா!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

H. Raja challenges Minister Sekar Babu

 

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுநாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு இவர்கள் இயற்றும் தீர்மானத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

 

இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரோதமான செயல் என்றும் இன்று நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் மரணத்திற்கு திமுகவும், திமுகவின் இலவச இணைப்புகளும் காரணம். மேலும், 7-6-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி மகாலிங்கம், நீதிபதி ஆதிகேசவன் ஆக இரண்டு பேரும் 75 கட்டளைகளை மாநில அரசுக்கு கொடுத்துள்ளார்கள். அதை எல்லாமே 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றார். ஆனால் அது சொல்லப்பட்டு 13 வாரங்கள் ஆகின்றன. அதில் எதுவுமே நிறைவேற்றவில்லை.

 

நான், ஒரு லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றேன். அதற்கு ஆதாரம் கொடுத்தால் மீட்கிறேன் என்று சேகர் பாபு சொன்னார். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாப்பா சத்திரம் என்ற ஊரில் காசி விஸ்வநாதருக்கு சொந்தமாக 177 ஏக்கர்‌ நிலத்தை சேகர் பாபு 24 மணி நேரத்தில் மீட்டால், இந்து அறநிலையத்துறை பற்றி இனிமேல் பேச மாட்டேன்” என்று தெரிவித்தார்

 

 

சார்ந்த செய்திகள்