Skip to main content

“இபிஎஸ் ஒப்புக்கொண்டது சரிதான்” - டிடிவி தினகரன்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

“EPS is right to agree” - DTV Dhinakaran

 

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்லத் திருமண விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “என்னைப்போல் ஒரு லட்சம் பழனிசாமி இந்த அதிமுகவில் உள்ளார்கள். எவராலும் அசைக்க முடியாது. இபிஎஸ் இல்லையென்றால் எவராவது இந்த கட்சியை ஆளுவார். அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் இருக்கும் வரை யாராலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது” எனக் கூறியிருந்தார். 

 

இந்நிலையில் திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து பேசிய அவர், “பதவி வெறியாலும் ஒரு சிலரின் சுயநலத்தாலும் ஜெயலலிதாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டு உள்ளது. உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் என சொல்லியுள்ளார்.

 

அதிமுகவில் ஒரு லட்சம் பழனிசாமி உள்ளார்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஒப்புக்கொண்டது சரிதான். அமமுகவில் சில நிர்வாகிகள் அணி மாறுகிறார்கள். சிலருக்கு பதவி குறைப்பு நடந்தாலோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக அவ்வாறு செய்கிறார்கள். அது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கத்தான் செய்கிறது. உடனடியாக அவர்களை விட திறமையானவர்கள் அப்பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். 

 

ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை நடத்துகின்றனர். 2013ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அரசியல் ரீதியாக பழிவாங்கல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தான் அந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுவதாக சொன்னார்கள். ஒருவர் பதவியில் இருக்கும் காலத்தில் அவருக்கு பதவி பறிபோனால் அவர் மேல் முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரை அப்பதவியில் தொடரலாம் என்னும் நிலையை ராகுல் காந்திதான் ஒத்துக்கொள்ளாமல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்துள்ளது. சட்டப்பூர்வமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் செய்து இருப்பதில் நாம் பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்