Skip to main content

ஜெயலலிதாவை விட எடப்பாடி மேல் எனக் கூறிய அமைச்சர்! அதிமுகவினர் அதிர்ச்சி!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து  சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். நேற்று கூட்டத்தில் எரிசக்தி மற்றும் மதுவிலக்கு துறை சம்பந்தமாக விவாதங்கள் நடைபெற்றது. 
 

admk



அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் தங்கமணி எனது கனவில் வந்தார் என்று கூறியதால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இன்று மீன்வளம் மற்றும் பால்வளம் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன. அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார். அப்போது அமைச்சரின் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். 

சார்ந்த செய்திகள்