Skip to main content

ஆன்லைனில் ஓட்டு வேட்டை நடத்தும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் லுயிஸ் அடைக்கலராஜ் !

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

பாராளுமன்ற தேர்தல் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக-காங் பேச்சுவார்த்தை தற்போது டில்லியில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக எம்பி கனிமொழி டில்லியில் தங்கி ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

lo


இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து திருச்சியில் உலாவரும் வாட்ஸ் அப் தகவல் திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தோழமை கட்சியினர் இடையே ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. 

 

ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள தகவலில் திருச்சி லோக்சபா வேட்பாளராக லூயிஸ் அடைக்கலராஜ்( முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன்) நிற்க அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை - 9944999991 என்ற எண்ணுடன் 8828843022 என்கிற எண்ணுக்கு அனுப்புங்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த வாட்ஸ் அப் பதிவு முதலில் காங்கிரசில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

 

lo

 

இந்த தகவல் கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்னும் கூட்டணியே எத்தனை இடங்கள் என்று இன்னும் முடிவு எட்டாத நிலையில் இப்படி வாட்ச் அப் செய்தியால் எல்லோரும் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து லூயிஸ் தரப்பில் விசாரித்தால் யாராவது ஆர்வக் கோளாரில் செய்து இருப்பார்கள் என்கிற தகவலே வெளியாகி உள்ளது. 

 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை வைகோ கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் திருச்சியில் 4 முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜின் இந்த ஆன்லைன் ஓட்டு வேட்டை கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்