Skip to main content

சசிகலா குறித்து ஓ.பி.எஸ். கருத்துக்கு டி.டி.வி.தினகரனின் பதில்! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

DTV Dinakaran's response to OPS opinion about Sasikala!

 

“ஓ.பி.எஸ். எப்போதுமே நிதானமாக பேசுபவர், சசிகலா குறித்தான கேள்விக்கு சரியான கருத்தைத்தான் கூறியுள்ளார். எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு" என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

 

அமமுக பொதுச்செயலாளரான டிடிவி. தினகரனின் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, வாண்டையாருக்கு சொந்தமான தஞ்சை அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் இன்று (27.10.2021) திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. 

 

வரவேற்பு நிகழ்சியில் வி.கே. சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்சியில் கலந்துகொள்ள நேற்றே தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள தனது பங்களாவில் வந்து தங்கிவிட்டார் சசிகலா. அவருக்கு அமமுகவினர் அமோக வரவேற்பு அளித்தது தஞ்சை அரசியல் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது.

 

இன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பு தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த டி.டி.வி. தினகரன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மருது சகோதரர்கள் வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் தற்போது எங்களிடம் உள்ளார்கள். எனவே அதிமுகவை மீட்டெடுக்க இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு, குறிக்கோள். ஓ.பி.எஸ். எப்போதுமே நிதானமாகப் பேசுபவர். சசிகலா குறித்தான கேள்விக்கு சரியாகத்தான் பேசியுள்ளார். அவர் சரியான கருத்தைத்தான் கூறி உள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்