Skip to main content

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

dmdk party candidate list has been released

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு  60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, தே,மு.தி.க. சார்பில் போட்டியிடும் 60 பேர் கொண்ட முழு வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 

dmdk party candidate list has been released

 

அதன்படி,  கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் டில்லி, திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் சங்கர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் சுபமங்களம் டில்லிபாபு, திரு.வி.க.நகர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சேகர், எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பிரபு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் முருகன், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் முருகேசன், செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சிவா, மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மூர்த்தி, கே.வி.குப்பம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தனசீலன், ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் பாக்யராஜ், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் முருகேசன், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் விஜயசங்கர், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் உதயகுமார்,  செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அன்பு, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நேரு, ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பாஸ்கரன், மைலம் சட்டமன்றத் தொகுதியில் சுந்தரேசன்,  திண்டிவனம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சந்திரலேகா, வானூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கணபதி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத்  தொகுதியில் விஜயகுமார், ஏற்காடு (ப.கு) சட்டமன்றத் தொகுதியில் குமார், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ் அரவிந்த், சேலம் (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் செல்வி, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சிவசுப்பிரமணியன், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் குழந்தைவேலு, பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ், கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் யோகேஸ்வரன், அவிநாசி (தனி) சட்டமன்றத் தொகுதியில் மீரா, திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதியில் செல்வகுமார், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியில் முருகராஜ், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மாதவன், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் ராமசாமி, கரூர் சட்டமன்றத் தொகுதியில் ரவி, கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கதிர்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

dmdk party candidate list has been released

 

அதேபோல், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் கிருஷ்ணகோபால், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் செந்தில்குமார், முசிறி சட்டமன்றத் தொகுதியில் குமார், பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ராஜேந்திரன், திட்டக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் உமாநாத், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் சிவகொழுந்து, கடலூர் சட்டமன்றத் தொகுதியில் ஞானபண்டிதன், கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பிரபாகரன், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் முத்துசிவக்குமார், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் சுப்பிரமணியன், சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஜெயலெட்சுமி, மதுரை (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் பாலச்சந்தர், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ், பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் சந்திர பிரகாஷ், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் சந்திரன், ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஆறுமுக நயினார், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ராஜேந்திராநாதன், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயபால், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் சிவக்குமார், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஐடன் சோனி ஆகியோர் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகின்றனர். 

dmdk party candidate list has been released

 

தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்