கரூரில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காமல் காலம் கடத்தியதால் அந்த இடமே பரபரப்பானது.
காங்கிரஸ் வேட்பாளர் இன்று கரூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா முடிந்தவுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு காலை 12.00 மணி முதல் 1.00 மணி வரை என தேர்தல் அதிகாரி நேரம் ஒதுக்கியிருந்தார். அதற்கு முன்னதாக 11.00 மணி முதல் 12.00 மணி வரை அ.தி.மு.க. வேட்பாளர் தம்பித்துரைக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.
12.00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆட்சியர் அலுகவலகம் உள்ளே நுழைந்தார். ஆனால் 12.15 ஆகியும் உள்ளே விடாமல் வெளியவே காத்திருக்க வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜோதிமணி எங்களுக்கு 12.00 மணி தானே நேரம் ஒதுக்கி கொடுத்தீர்கள், ஆனால் மணி 12.15-க்கு மேல் ஆகிவிட்டது ஏன் உள்ளே அனுப்ப மறுக்குறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்றைக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் நாளை ஒருநாள் தான் டைம் இருக்கு என்று கடுப்பாக கோஷம் போட ஆரம்பித்தனர்.
இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பினார்கள். பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதை பார்த்த அதிகாரிகள் வேறு வழியில்லாமல் உள்ளே அனுப்பி வைத்தனர். உள்ளே சென்ற போது அங்கே அ.தி.மு.க.வின் போட்டி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் ஆனாதால் உள்ளே அனுப்பினால் பிரச்சனை வரும் என்று தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.