Skip to main content

''4 வது,5 வது படித்தவருக்கு இருக்கும் அறிவுகூட சி.வி.சண்முகத்திற்கு இல்லை''-கோவை செல்வராஜ் விமர்சனம் 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

 "CV Shanmugam doesn't even have the knowledge of a 4th or 5th grader" - Coimbatore Selvaraj Review

 

அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், '' நேற்று நடந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசரம் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் நல்ல முடிவாக நினைக்கிறார்கள். கட்சியை கபளீகரம் செய்து பதவியை பெற நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். நேற்று டெல்லியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், நாங்கள் தேர்தல் நடத்த தேதி அறிவிக்கவில்லை, வழக்கு மேல்முறையீட்டில் இருக்கும்பொழுது எதெல்லாம் பண்ணக்கூடாது என எங்களுக்கு தெரியாதா என்றது ஏதேதோ பேசியுள்ளார்.

 

மேலும் இவர்கள் சொல்லித்தான் இந்த தடை உத்தரவு போடப்பட்டதாகவும் சொல்கிறார். நீதிபதிகள் சொன்ன கருத்தைத் திரித்து பரப்புகின்ற சி.வி.சண்முகம் வழக்கறிஞருக்கு படித்தாரா? எதற்கு படித்தார் என்று தெரியவில்லை. ஒரு நான்காம் வகுப்பு , ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் இவரெல்லாம் எப்படி சட்டத்துறை அமைச்சராக இருந்தார் என்பது வெட்கக்கேடாக உள்ளது. ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பட்டியல் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் என்று கொடுத்த பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்