Skip to main content

நிதி நெருக்கடியில் காங்கிரஸ்... மோடி கொடுத்த க்ரீன் சிக்னல்... ஈஷா யோகா மையம் ஜக்கியால் ஏற்பட்ட சர்ச்சை!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

மத்தியிலும், பல மாநிலங்களிலும் 6 வருடத்துக்கு மேல் ஆட்சியில் இல்லாத காங்கிரசின் நிதித் தேவைகளை மத்திய பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத்தான் சமாளித்துக் கொண்டிருந்தார். தற்போது அங்கேயும் ஆட்சி கவிழ்ந்ததால் கரோனாவைவிட மோசமான பாதிப்பில் காங்கிரஸ் தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

bjp



இந்த நிலையில், நெருக்கடியான நிதி நிலையிலும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலருக்கும் காஸ்ட்லியான நவீன கார்களை வாங்கச் சொல்லி க்ரீன் சிக்னல் மோடி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெங்கைய்யா நாயுடு, ஓம்பிர்லா உள்ளிட்ட சிலர் தற்போது இருக்கும் நிலையில் எங்களுக்குப் புதிய கார்கள் வேண்டாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் டெல்லியில் முஸ்லிம் அமைப்பு நடத்திய மாநாட்டில் வெளிநாட்டவர் கலந்துகொண்டதுபோலவே, கடந்த  மாதம் ஜக்கியின் ஈஷா மையம் நடத்திய மகா சிவராத்திரி விழாவில் வெளிநாட்டவர் பலர் கலந்து கொண்டார்கள். உலகளவில் கரோனா பரவிய நேரத்தில் வந்த வெளிநாட்டுக்காரர்கள் அப்போது சோதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது என்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்